Archive | kavidhai RSS feed for this section
Aside

Nostalgia – Part 1

21 Oct

+1 to my previous post. This time about Prem annan. Gets me nostalgic while going through this

உங்களை பற்றி எழுத
பலநாட்கள் காக்க வைத்தமைக்கு
மன்னிப்புகள்.
பிரேம் குமார்..
சிரிக்க தெரிந்த முகம்…
பார்த்தவுடன் கைக்குலுக்கும்
அன்பில்..
என்னை
செல்ல பெயர் வைத்து கூப்பிடும்
விதம் எனக்கு என்றும் பிடிக்கும்
அந்த பெயர் பிடிக்காவிட்டாலும்..
கடைசியாக நண்பர்கள்
இப்படி கூப்பிட்ட நாள்
மறந்து விட்டது.
குறும்புத்தனம் ரத்தத்தில் கலந்ததா
இல்லை நாம் மட்டும் தான் விதிவிலக்கா
என்று இன்றும் புரியவில்லை..
சேர்ந்து இருக்கும் தருணங்கள்
நிறைய கிடைக்கவில்லை என்றாலும்
சீக்கிரமே சூழ்நிலைகள் அமையப்பெறும்
அரும்புவிட்ட நம் தோழமை
நாளும் நீண்டு விருட்சமாகும்.
நம் மக்களிடம் கொண்ட
இந்த இனிய கணங்கள் தொடரட்டும்..

அன்புடன்,
குஹன்.

என்ன எழுத நான்?

21 Oct

Again a seemingly indefinite period of time between posts. I was searching for the “kavidhai” I have written for my friends through my old e-mail records and one of them is below. This humorous guy wanted me to write something about him, looks like I have just barely scorched the surface about this and it is very short. This is another “kavidhai” of mine which is going to live eternally.

 

PS: Hope WP understands my request 🙂

 

குறுந்தாடியும் குறும்பு கண்களும்
பார்த்தவுடன் பதியும் மனதில்.
பார்த்த மாத்திரம் பரஸ்பரம்
கைகுலுக்கல்கள் என
சிரித்த முகத்துடன்
சொன்ன சிரிப்பு வெடிகளில்
இன்புற்ற இதயம் இது
களித்திருந்த நொடிதனிளில்
என்னை பற்றி எழுது என்று
சொல்லிவிட்டீர்கள்
நகைச்செல்வம் கொண்டு விளங்கும்
இந்த மேன்மை மேலும்
சிறந்து விளங்கட்டும்.
என்ன எழுத நான்?
வார்த்தைகளுக்கு காத்திருந்த
காகித கிறுக்கனுக்கு
இருந்தது நன்னினைவுகள் மட்டுமே.

முதல் துளி..

11 Aug

நாளொன்றும் இப்படியே
என்றெண்ணி மனம் சென்று
கலைத்த நினைவுகளுடன்
வாகனத்தை செலுத்தி
கொண்டிருந்தேன்..
சட்டென கண்ணில் வந்து
விழுந்து லேசாக நனைத்தது
மழையின் முதல் துளி..
தூறல் கொஞ்சம் சிதறி
மனதினை குளிர்த்தது..
இதயத்தின் ஓரத்தில்
மழையை வரவேற்கும்
வணக்கத்தை சட்டென
மறுத்து நிறுத்தியது
சிறுபுத்தி மூளை.
நான் போய் சேர்ந்ததும்
நீ வந்துவிடு மழையே என்று
யோசனை வேறு.
இதயம் நனைய துடித்தாலும்
அலுவலை நினைவுருத்தியது
மூளையும், கரைந்தோடி
கொண்டிருக்கும் மணித்துளிகளும்.
அட என்ன மனித பிறவியடா இது
என்று பிதற்றியது இதயம்.
வானம் தாண்டி வந்திறங்கும்
நீரமுத புதையலினை
சிறுகுறுந்து குளித்து
கதிரவன் ஒளியில் மிளிர
கிடைக்க பெறும்
சுகத்தை கிடைக்க பெறாத
ஈனப்பிறவி தளுதளுத்தது.
உனக்காகவே இங்கே வந்தோம் என
மேகக்கூட்டங்கள் இடிமின்னலாய்
அறிவிப்பு  தர
கூனிக்குறுகி இதயத்திற்கு
வழிவிட்டது மூளை.

பெயர் சூட்டப்படவில்லை …

24 Jul

ஒரு மாலை வேளையில்
உன்னுடன் நடந்து சென்றிருந்தேன்..
நம் விரல்கள் கலந்திருந்த
அழகை கண்டு
கதிரவனும் சிவந்திருந்தான்..
வீடு திரும்பி சிறிது நேரத்தில்
நினைவில் உன்னை
தாங்கி கொண்டிருந்தேன்…
என் உலகில் நீ வந்ததும்
நான் கொண்ட மாற்றங்கள்….
அட.. உலகம் அழகாய் தெரியுதே..
மேகத்தில் கால்வைத்து நடக்கிறேன்
உன் சினுங்கலுக்கும்  புன்னகைக்கும்
என்னை பணித்து விட்டேன்..
இன்று என்ன பேசலாம் என்றிருந்த
நாட்கள் சென்று
என்னென்ன பேசினோம் என்றே
மறக்கும் நாட்கள் தான் இன்று.
துள்ளும் இதயத்தின்
தவிப்புகள் தான் இங்கே..
உன்னோட வாழ கிடைக்கும்
அந்த நாளுக்கென காத்திருக்கிறேன்..

நீ போகும் பாதையில்…

12 Jun

நீ என்னை கடந்து
சென்ற போது
மிகப்பிடித்த பாடலின்
அலைவரிசையில் நுழைந்து
துடித்தது என் இதயம்
அருகில் இசைத்துக்கொண்டிருந்த
ஒலிபெருக்கியின்  சுவர்கள்
இதயத்தின் துடிப்பை
கண்டு  சட்டென
நிறுத்தி தன் தோல்வியை
ஒப்புக்கொண்டது..

மின்னலே…

30 May

கோடையின் ஆத்திரத்தில்
நண்பகல் பாலைச்சோலை நடுவே
நீண்டு கிடக்கும் தார் வாய்க்காலில்
நான் நடந்து செல்ல
தாகம் கொண்ட கண்களில்
காணல் நீரொத்த குளிர்ச்சி தான்
நீ என்ன கடந்து செல்கையில்..
நிழல் தேடி ஒதுங்கும்
உச்சி நீண்ட மரத்தின்
கிளைகளும் கொஞ்சம் அசையுமடி
உன் கண் சிமிட்டல்களில்..
அந்த இதமான உணர்வு
என் உடலுக்கல்ல
இளகிய என் இதயத்திற்கு..
உன் வரவிற்காக நாள்தோறும்
மாலைநேர மழையாய்
காத்திருக்கிறது இந்த நெஞ்சம்
மின்னல் போல சென்றதும்
அந்த கணம் விரைத்தது
என் அடுத்த சில மணிநேரங்களை..
நீ தான்
என் சகலமும்.

ஞாபக கிண்ணங்கள்

30 Mar

Hi,

After a nice graduation day, I expected to write a Degree day special. There are several drafts but could not complete it on time though. A  chap from his last days of completing college wanted me to write a farewell poem. I tried including almost everything, realized that it was becoming very longer. So, here it is.

பதினாறு வயதினில்
கனவுலகை திறந்து வைத்தது.
இந்த கல்லூரி பருவம்
கிடைக்க பெற்றது
ஒரு சில மணி நேர வாழ்கை
ஒவ்வொரு நாள் ஒன்றிலும்.
நாள் கொண்ட உறவுகள்
பிரிவுகள், நட்புகள், பகைமைகள்
காதல் வயப்பட்டு கிடந்து
பேச முடியாது தருணங்கள்..
முடிவே இல்லாத அரட்டைகள்,
நண்பரால் எழுதி தரப்பட்ட
பதிவுகள் மற்றும் பல நூறு  இனிமைகள்.
முடிவிலா அனுபவங்களை
தந்த இந்த கல்லூரி
முடிவுறும் என்பது தான்
தீராத சோகம்.
பிரிவுற்று செல்லும் போது
விடும் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும்
சொல்லும் பல நூறு கதைகள்.
கல்லூரியின் நினைவுகள்
வாழ்நாள் முழுதும்
பசுமை மாறா

ஞாபக கிண்ணங்கள்.

%d bloggers like this: