முதல் துளி..

11 Aug

நாளொன்றும் இப்படியே
என்றெண்ணி மனம் சென்று
கலைத்த நினைவுகளுடன்
வாகனத்தை செலுத்தி
கொண்டிருந்தேன்..
சட்டென கண்ணில் வந்து
விழுந்து லேசாக நனைத்தது
மழையின் முதல் துளி..
தூறல் கொஞ்சம் சிதறி
மனதினை குளிர்த்தது..
இதயத்தின் ஓரத்தில்
மழையை வரவேற்கும்
வணக்கத்தை சட்டென
மறுத்து நிறுத்தியது
சிறுபுத்தி மூளை.
நான் போய் சேர்ந்ததும்
நீ வந்துவிடு மழையே என்று
யோசனை வேறு.
இதயம் நனைய துடித்தாலும்
அலுவலை நினைவுருத்தியது
மூளையும், கரைந்தோடி
கொண்டிருக்கும் மணித்துளிகளும்.
அட என்ன மனித பிறவியடா இது
என்று பிதற்றியது இதயம்.
வானம் தாண்டி வந்திறங்கும்
நீரமுத புதையலினை
சிறுகுறுந்து குளித்து
கதிரவன் ஒளியில் மிளிர
கிடைக்க பெறும்
சுகத்தை கிடைக்க பெறாத
ஈனப்பிறவி தளுதளுத்தது.
உனக்காகவே இங்கே வந்தோம் என
மேகக்கூட்டங்கள் இடிமின்னலாய்
அறிவிப்பு  தர
கூனிக்குறுகி இதயத்திற்கு
வழிவிட்டது மூளை.

2 Responses to “முதல் துளி..”

 1. manikbasa August 11, 2010 at 4:17 pm #

  wonderful kavitha machi :claps:claps:

 2. D.Mahesh Kumar August 12, 2010 at 10:36 am #

  Gr8 work

  wonderful

  brain looks always for consequences

  all the best

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: